என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நாளை வெளியீடு
நீங்கள் தேடியது "நாளை வெளியீடு"
பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியாகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்கிறார். #LSPolls #DMK #MKStalin #Manisfesto
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையில்காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைமை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என இன்று மாலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திப்பார் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMK #MKStalin #Manisfesto
அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை:
மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.
மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த தேர்வு முடிவுகளை (www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.
மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.
மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த தேர்வு முடிவுகளை (www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். #SSLC #ExamResult
சென்னை:
10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர்.
இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது.
மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #SSLC #ExamResult

×

X